வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கோடிகளில் புரளும் அம்மாவும் கைவிட்ட பரிதாபம்.. பாக்யராஜ் பட நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை

பிரபல நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தனது வாழ்க்கையை ஓட்ட மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறார். இவருடைய அம்மா பிரபல நடிகை ஆவார். சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.இவருடைய வாரிசு சினிமாவில் வந்த புதிதில் ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது.

முதன்முறையாக பாக்யராஜின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் சோப்பு விற்று வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தவர் இந்த நடிகை.

அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனும் கைவிட்டதால் தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த நடிகை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் சோப்பு விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இந்தப் பேட்டியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த இவருக்கா இந்த நிலைமை என வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவருடைய அம்மாவும் இவருக்கு உதவ வில்லையே என்று வேதனையை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் என்னதான் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தன்மானத்துடன் வாழவேண்டும் என்று சோப்பு விற்று குடும்பத்தை நடத்தும் இந்த நடிகையை பாராட்டி வருகின்றனர்.

அதையும் வெளிப்படையாக அனைவரிடமும் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். தன்மானத்துடனும், தைரியத்துடனும் இருக்கும் இந்த நடிகை கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேறுவார். மேலும் இந்தப் பேட்டியை பார்த்து அந்த நடிகையுடன் பணியாற்றிய இயக்குனர், தயாரிப்பாளர் யாராவது அவருக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

Trending News