வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அதுக்கு எல்லாம் நீங்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.. அஜித்தை பற்றி ஓபனாக பேசிய பாலிவுட் வில்லன்

அஜித்தைப் போல அடக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை என பாலிவுட் பிரபல வில்லன் நடிகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில், விவேகம் திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருப்பார். இத்திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், விவேக் ஓபராய் வில்லனாக நடிக்காமல் அஜித்தை புகழ்ந்து பேசி நடித்ததும் இப்படத்தின் தோல்விக்கு மேலும் ஒரு காரணம் என பலரும் தெரிவித்தனர்.

இருந்தாலும் நடிகர் அஜித்திற்கு ஏற்ற வில்லனாக விவேக் ஓபராய் இருந்ததாக பலரும் தெரிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாக உள்ள கடுவா திரைப்படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய், இத்திரைப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்போது நடிகர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். அதில் நடிகர் அஜித்துடன் விவேகம் படத்தின் படப்பிடிப்பிற்காக பல்கேரியா நாட்டில் இருந்துள்ளாராம். அங்கு 17 டிகிரி செல்சியஸ் குளுர் பனியில் அனைவரும் உறைந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் அஜித் இருந்தாராம்.

அப்போது அஜித் தன்னை சந்தித்து, கட்டி அணைத்து அவர் கைகளில் இருந்த டம்ளரில் டீ ஊற்றிக் கொடுத்துள்ளாராம். மேலும் தன் அருகில் இருந்த தனது மேனேஜர், மேக்கப் ஆர்டிஸ்ட் உள்ளிட்டோருக்கும் அஜித் தன் கையாலேயே டீயை ஊற்றிக்கொடுத்துள்ளாராம். அஜித்தின் இந்த பணிவை பார்த்து அப்படியே உறைந்து போனதாக விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்

அப்படிப்பட்ட அடக்கமான மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது என்றும், மேலும் அவர் என் மூத்த அண்ணன், அஜித் அண்ணன் என்றும் விவேக் ஓபராய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் நண்பராக இருப்பதை விட ரசிகராக இருப்பதே எனக்கு பெருமை என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News