செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜீ தமிழ், விஜய் டிவிக்கு நேர்ந்ததைப் பார்த்து உஷாரான சன் டிவி.. டிஆர்பி-யில் கொடி கட்டுவது உறுதி

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கொடிகட்டிப் பறந்த இரண்டு சீரியல்கள் தற்போது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிந்த சன் டிவி, தன்னுடைய சீரியலுக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விடுமோ என கடந்த சில நாட்களாக சங்கடத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் ரோஜா சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் நாள்தோறும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூரியன் மற்றும் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுடன் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி, ராஜேஷ், காயத்ரி, டாக்டர் சர்மிளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ரோஜா சீரியல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அந்த சீரியலின் கதாநாயகன் சிபு, சீரியலில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.

இதேபோன்றுதான் டிஆர்பி-யில் ஒரு காலத்தில் டாப் லிஸ்டில் இருந்த ஜீ தமிழ் சீரியல் ஆன செம்பருத்தி சீரியலின் கதாநாயகன் ஆதி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகியதால், அதன்பிறகு டல்லடித்ததுடன் டிஆர்பி லிஸ்டில் இருந்து தூக்கி எறியப்பட்டது.

இதேபோன்று விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகியதால் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பாரதிகண்ணம்மா சீரியல் பிடிக்காத சீரியல் ஆகவே மாறிவிட்டது. இந்த நிலை தற்போது ரோஜா சீரியல் இருக்கும் வந்துவிடுமோ என்று சன் டிவி உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும்போது ரசிகர்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையினால் சிபு ரோஜா சீரியலை விட்டு விலகாமல் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியலுக்கு வந்த நிலையைப் பார்த்து உஷாரான சன் டிவி ரசிகர்களை வைத்து காய் நகர்த்தி ரோஜா சீரியலின் கதாநாயகன் மனதை மாற்றி இருக்கிறது. இதன் பிறகு ரசிகர்களும் ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு தான் நடிக்கப் போகிறார் என்பதை அறிந்து சந்தோசத்தில் திளைக்கின்றனர்.

Trending News