கொடுத்த வாக்கை காப்பாற்றிய மிஸ்கின்.. பெயரை கெடுத்துக் கொண்ட விஷால்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது இவர்கள் இருவரிடையே கடும் சண்டை வந்தது ஊரே அறிந்த ஒன்றுதான்.

அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார். மிஷ்கினும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தார். இதில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீதம் உள்ளது.

இதனிடையே தற்போது பிரபுதேவா நடித்த கொண்டிருக்கும் படம் ரேக்ளா. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறாராம். அதாவது இப்படத்தின் டனிங் பாயிண்ட் அவர் தானாம். இந்நிலையில் தற்போது மிஷ்கின் பிசாசு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவரை அழைக்க ரேக்ளா பட இயக்குனர் தயங்கி உள்ளார்.

ஆனால் மிஷ்கின் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய பிசாசு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை வந்து அரை மணி நேரம் அந்த காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு போயிருக்கிறாராம்.

இவ்வளவு பிஸியாக இருந்தபோதும் தனது பட வேலையை நிறுத்திவிட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மிஷ்கின் இவ்வாறு வந்ததற்கு அந்த இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் இவ்வளவு மெனக்கெட்டு மிஷ்கின் இவ்வாறு செய்துள்ளதால் அவரின் பெயரை களங்கம் விளைவிக்கும் விதமாக விஷால்தான் அப்படி நடந்து கொண்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் தொடர்ந்து விஷாலின் பெயரில் இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டுகள் வருவதால் அவரது சினிமா கேரியர் மிகவும் பாதித்துள்ளது. இதனால் மீண்டும் பழையபடி தரமான வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே விஷால் ஆல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.