அஜித், விஜய் யாரைப் பிடிக்கும்.. அசரவைக்கும் பதிலை கூறிய கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். காதலை இப்படியும் சொல்ல முடியுமா என்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது இவருடைய படங்கள். மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல அற்புத படைப்புகளை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் மாதவன், சூர்யா, கமல், சிம்பு, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் முன்பு அஜித், விஜய் யாரை பிடிக்கும் என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது ரசிகர்களிடம் தல என்றால் யார் என எதிர்க் கேள்வி கேட்டு இருந்தார்.

அப்போது விஜய் தான் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பிடித்த நடிகர் என்பது உறுதிபட தெரிந்தது. அதன் பிறகு அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கும் வாய்ப்பை கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கிடைத்தது. படமும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கிடைத்தது. அதாவது யோஹன் என்ற படத்தை விஜய் வைத்த ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படம் தொடங்கப்படவில்லை. தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கலந்து கொண்டார்.

உங்களுக்கு விஜய்யா, அஜித்தா என்ற கேள்வி வைக்கப்பட்டது. அஜித்துடன் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் பணியாற்றியதினால் அஜித் என்று சொல்வார் என எதிர்பார்த்த நிலையில் சற்றும் யோசிக்காமல் விஜய் என கூறியிருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியும், விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாக வேண்டும் என தங்களது ஆசையை தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் இவர்களது கூட்டணியில் படம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக அந்தப் படம் காதல் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →