வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பொன்னியின் செல்வனை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான மணிரத்னம்

கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் தற்போது திரைப்படமாக இயக்கி முடித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் இந்த திரைப்படத்தை பல கோடி செலவு செய்து தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மணிரத்னத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏதாவது ஒரு பிரபலத்தை தேவையில்லாமல் சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றியும் கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது மணி சார் தன்னுடைய படங்களில் மறைமுகமாக வலதுசாரி ஆர் எஸ் எஸ் சிந்தனைகளை விதைத்த முன்னோடி. அதே போன்று தான் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் காவி கொடியுடன் தயாராகி உள்ளார்.

அந்தப் படத்தின் போஸ்டர் இதனை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது மணிரத்னம் காவி கொடியை ஆதரிக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய இந்த கருத்து தற்போது சிறு சலசலப்பை உருவாக்கியுள்ளது.

உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கால வம்சத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வரலாற்று காவியத்தை ப்ளூ சட்டை மாறன் இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்தது படகுழுவை டென்ஷன் படுத்தியுள்ளது. மேலும் மணிரத்னமும் இது போன்ற விமர்சனங்களால் கடுப்பில் இருக்கிறாராம்.

- Advertisement -

Trending News