ஜேடி – ஜெர்ரி இயக்கத்தின் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர் சரவணன் ஹீரோவாக கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுடேலா இருவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மே மாதத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பல முன்னணி நடிகைகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதைப்போன்று கடந்த மாதம் ரிலீஸ் ஆகி தற்போது திரையரங்கில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மே மாதத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் பல திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த இரண்டு படங்களின் ஆடியோ லான்ச் விட சிம்பு படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்ட நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது சிம்பு நடித்து முடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15-ல் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
மாநாடு படத்திற்குப் பின் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படம் மெகா வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு பிரமாண்ட ஆடியோ லான்ச் ஏற்பாடுகள் நடக்கவிருக்கிறது. முதலில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த பங்க்ஷன் வைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கே எல்லாம் வைத்தால் ஏதோ ஒரு பங்க்ஷன்போல் ஆகிவிடும். பிரம்மாண்டம் இருக்காது என்று வேற லெவலில் யோசித்து ஒரு திட்டம் போட்டுள்ளனர்.
இப்பொழுது இந்த ஆடியோ லான்ச் பங்க்ஷன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால் இந்த வெந்து தணிந்தது காடு படம் மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த ஆடியோ லான்ச் பங்க்ஷன் அங்கே இருப்பது போன்ற செட்டை இங்கு அப்படியே அமைத்து அதற்கு ஏற்றார் போல் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
சமீபத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடத்தப்பட்ட தி லெஜண்ட், மற்றும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஓரம் கட்டும் அளவுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு பிரம்மாண்டத்தில் மட்டுமல்லாமல் படத்திற்குரிய எதிர்பார்ப்பையும் எகிற வைக்கும் அளவிற்கு நடைபெறப் போகிறது.