தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் தான். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
மிகப்பிரமாண்டமான வரலாற்று காவியமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் என்று பட குழுவினர் ஒரு செய்தியையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே தினமும் ஒவ்வொரு கேரக்டரின் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை பட குழு குஷிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் போஸ்டர் இணையதளத்தில் ட்ரெண்டானது. அதை தொடர்ந்து கார்த்தியின் வந்தியத்தேவன், ஐஸ்வர்யா ராயின் ராணி நந்தினி ஆகிய போஸ்டர்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது திரிஷாவின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் அவர் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொள்ளை அழகுடன் இருக்கும் திரிஷாவின் அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இளவரசி குந்தவைக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதாவது கார்த்தி, திரிஷாவிடம் இளவரசி உங்கள் லைவ் லொகேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை டிராப் ஆப் பண்ணனும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது.
இந்த பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவனின் காதலிதான் குந்தவை. அதனால் தான் கார்த்தி அந்த கேரக்டராகவே மாறி தன் காதலி குந்தவைக்கு இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறார். இதன் மூலம் கார்த்திக்கு திரிஷா தான் ஜோடி என்று தெரியவந்துள்ளது. இது படத்தின் மீதான அதிகரிப்பை இன்னும் தூண்டியுள்ளது.