திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

யாரும் கேட்டிராத பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம்.. படத்தின் ஆணிவேரே இவர்தானாம்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும். மேலும் அதை ஆழ்ந்து படிக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் ஆகவே நாம் மாறிவிடுவோம். மேலும் அந்தக் கதையில் இருந்து வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாவது ஆகும். அந்த அளவிற்கு வாசகர்களை கட்டிப்போட்ட நாவல் பொன்னியின் செல்வன்.

இந்த நாவலை தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். சோழ மன்னர்களின் வரலாற்றை சொல்லும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் வாசகர்கள் படித்துள்ளனர்.

ஆனால் சோழர் காலத்தில் அதிக இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதிலும் அந்த காலத்தில் இசைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் சோழர் காலத்தில் இசைப் பாடல்களை நம்மால் கேட்டிருக்க முடியாது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சோழர் காலத்துக் இசைக்கருவிகளை ஆய்வுசெய்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பழமைமாறாத இந்த இசையை ஏஆர் ரகுமானின் குழு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.

இதனால் பொன்னியின் செல்வன் படம் கண்களுக்கு மட்டும் அல்லாமல் செவிக்கு விருந்தாக அமையவுள்ளது. அதுவும் ஏஆர் ரகுமான், மணிரத்னம் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளது. அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் படமும் இடம்பெற உள்ளது.

Trending News