ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்னது பாகுபலி பொன்னியின் செல்வனின் காப்பியா? சைலண்ட்டா ஆட்டையை போட்ட ராஜமௌலி

மணிரத்தினம் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நாவலை படித்த பலரும் படம் எப்படி இருக்கும் என்பதை காண மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் டீசர் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த படம் பாகுபலி திரைப்படத்தை போன்று இருப்பதாகவும் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் நாவலை ராஜமௌலி தான் காப்பியடித்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பாகுபலி திரைப்படத்திலும் இருப்பதை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அவர்கள் லிஸ்ட் போட்டு தற்போது இணையத்தையே அதிர வைத்து வருகின்றனர்.

அதாவது பாகுபலி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள போர் காட்சிகள் அனைத்தும் அந்த நாவலில் கல்கி விலாவாரியாக விவரித்து இருப்பார். அதேபோன்று ரம்யா கிருஷ்ணன் குழந்தையை ஆற்றில் தூக்கி பிடித்து இருக்கும் காட்சியும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து விடுவார் அப்போது அவரை ஒரு பெண் காப்பாற்றுவார். இதுதான் பாகுபலி திரைப்படத்திலும் காட்டப்பட்டுள்ளது. அருள்மொழிவர்மனை காப்பாற்றிய அந்த பெண்தான் ஊமை ராணியான மந்தாகினி.

அது மட்டுமல்லாமல் பாகுபலியில் காட்டப்பட்டு இருக்கும் முடி சூட்டு விழா நிகழ்வும் கல்கியின் நாவலில் மிகவும் விலாவாரியாக காட்டப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து தான் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தில் அந்த காட்சிகளை வைத்திருப்பதாக தற்போது ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.

மணிரத்தினம் அதே நாவலை படமாக்குவதால் அதை நன்றாக ஆராய்ச்சி செய்து தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் ராஜமவுலி அந்த கதையை யாரும் படமாக்க மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் அவற்றையெல்லாம் காப்பி அடித்தது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

- Advertisement -

Trending News