சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எம்ஜிஆரை கொலை முயற்சி செய்த MR ராதா.. பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை கூறப்போகும் மகள்

தமிழ் திரையுலையில் எத்தனையோ பரபரப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் நடிகர் எம்ஆர்ராதா, எம்ஜிஆரை கொலை முயற்சி செய்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அதாவது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை, நடிகர் எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டார். கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த எம் ஆர் ராதா அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமல்லாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.

அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையில் அவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் பல்வேறு விதமான காரணங்களும் சொல்லப்பட்டது. இறுதியில் எம் ஆர் ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் எம் ஆர் ராதா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதில் அவருடைய தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் அவர் விடுதலையானது குறிப்பிடப்பட்டது. இப்பொழுது இந்த சர்ச்சையான கதையை வெப் தொடராக எடுக்க ஒடிடி நிறுவனங்கள் திட்டம் தீட்டி வருகிறது.

அந்த வகையில் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ராதிகா தன்னுடைய சொந்த தயாரிப்பில் இந்த சம்பவத்தை தொடராக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் பல வருடங்களாக வெளிவராமல் இருக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரு செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை நாம் விரைவில் காணலாம்.

- Advertisement -

Trending News