காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.
ஏற்கனவே இவர் தயார் செய்து வைத்திருந்த கதையில் அஜித் சில மாற்றங்களை கூறியிருக்கிறார். தற்போது மீண்டும் சில விஷயங்களில் அஜித் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது விக்னேஷ் சிவன் ரெடி செய்து வைத்திருந்த கதையில் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகளும், அரசியல் குறித்த வசனங்களும் அதிகமாக இருக்கிறதாம்.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான அஜித் இது போன்ற வசனங்கள் வேண்டாம் என்று அவருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் கதையை தயார் செய்தால் மட்டுமே போதும், தேவையில்லாத விஷயங்களை இழுக்க வேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம்.
இதனால் விக்னேஷ் சிவன் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தலையை சொரிந்து கொண்டே சுற்றி திரிகிறாராம். ஏனென்றால் படத்திற்கு அந்த அரசியல் காட்சிகளும், வசனங்களும் ரொம்பவே முக்கியமாம். இதற்காக விக்னேஷ் சிவன் ரொம்பவும் மெனக்கெட்டு ஸ்க்ரிப்டை தயார் செய்திருந்தாராம்.
ஆனால் அஜித் அந்த காட்சிகளை கூட வேண்டாம் என்று ஒதுக்கியது அவரை ரொம்பவே மன கஷ்டத்தில் தள்ளி இருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன், அஜித் கூறியபடியே அனைத்தையும் தயார் செய்யும் மும்முரத்தில் இருக்கிறார்.
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார். இதனால் தற்போது பட வேலைகள் அனைத்தையும் அவர் பரபரப்புடன் பார்த்து வருகிறாராம்.