இப்போது கமல் அவ்வளவு பிரகாசமாக இருக்கிறாராம். மனிதன் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ். 30 வயது கம்மியானவர் போல் காட்சியளிக்கிறார். அளவுகடந்த சந்தோசத்தில் இளம் வயது வாலிபனைப்போல் சுற்றித் திரிகிறார்.
ஆழ்வார்பேட்டையில், அவர் பழைய ஆபீசை கட்சிக்கு கொடுத்துவிட்டார். இப்பொழுது அதே இடத்தில் அவருக்கு சொந்தமாக ஒரு புது ஆபீஸ் காட்டியிருக்கிறாராம். இதுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீஸ்சாகா இப்பொழுது செயல்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இந்த அளவிற்கு ஹைடெக் டெக்னாலஜி ஆபீஸ்சாகா செயல் பட்டது இல்லையாம். உள்ளே கமல் சம்மதம் இல்லாமல் யாருக்கும் அனுமதி கிடையாது.
லிப்டில் செல்லும் போதே விக்ரம் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். ஆபீஸ் முழுவதும் நவீன தரத்தில் கம்ப்யூட்டர் டெக்னாலஜியோடு செயல்பட்டு வருகிறதாம். எங்கே போனாலும் ஸ்கேனிங், கோடிங் என அனைத்தும் வெளிநாட்டு டெக்னாலஜியாம்.
அவர் ஆபீஸில் எல்லா பொருட்களும் வெளிநாட்டு இறக்குமதிதானாம். இதில் குறிப்பாக அவர் மகள்களாகிய, சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் நிறைய ஐடியாக்களை கொடுத்ததாக தெரிகிறது. இப்பொழுதுள்ள சினிமா தயாரிப்பு நிறுவனங்களிலேயே கமலஹாசன் உடைய ராஜ் கமல் பிலிம்ஸ் தான் ஹைடெக், டெக்னாலஜி வசதிகளை கொண்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் வரிசையாக நிறைய படங்கள் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் படம், அதன்பின் ரஜினிகாந்த் படம் என இவரது தயாரிப்பில் பெரிய, பெரிய நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள். இப்பொழுது ஆபீசை பெரிய லெவலில் மாற்றிவிட்டார், அடுத்து முழுவதுமாக தயாரிப்பு வேலையில் இறங்கி விடுவார் என்று ஆபீஸில் வேலை செய்பவர்கள் சிலாகித்துக் கொள்கிறார்கள்.