தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பல திரை நட்சத்திரங்கள் நடித்து வரும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனால் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது சூட்டிங் தடைபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஹைதராபாதில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது வாரிசு படக்குழு ஹைதராபாத்தில் உள்ள லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றில் ஷூட்டிங் நடத்தி வருகிறது. எல்லா ஆர்டிஸ்ட் காம்பினேஷனில் நடைபெற வேண்டிய இந்த சூட்டிங் கனமழையால் ஒரு வாரமாக முடங்கிக் கிடக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது மற்றொரு விஷயமும் வாரிசு படக்குழுவிற்கு தடையாக அமைந்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து அங்கே சினிமாத்துறையினர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அங்கு தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்த்திவிட்டனர்.
இதனை சமாளிப்பதற்காக நடிகர்களும், இயக்குனர்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என போராட்டத்தை தொடங்கயுள்ளனர். இதனால் இருதரப்பு இடையே சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டால் மட்டுமே இந்த போராட்டம் முடிவுக்கு வரும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு சிக்கலில் தவித்து வருகிறது வாரிசு படக்குழு.
மேலும் வரும் காலங்களில் மழை அதிகம் இருக்கக்கூடும் என்பதால் விரைந்து சூட்டிங்கை முடித்து விடலாம் என்று நினைத்த நிலையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் வாரிசு படக்குழு உள்ளது.