வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சிவகார்த்திகேயனை தவிர்த்த நெல்சன்.. ஜெயிலர் படத்தில் மிரட்ட வரும் நடிகர்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் மூலம் 4-வது முறையாக சன்பிக்சர்ஸ் உடன் ரஜினி கூட்டணி போட்டுள்ளார்.

மேலும் ஐஸ்வர்யாராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன, கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது சிவகார்த்திகேயன் பிரன்ஸ், மாவீரன் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் தற்போது இளம் நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளார். அதாவது தரமணி, ராக்கி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி படத்தில் வசந்த் ரவியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேடித்தேடி நடித்து வருகிறார் வசந்த் ரவி. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தற்போது வசந்த் ரவிக்கு கிடைத்துள்ளது.

இப்படத்தில் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வசந்த் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் மூலம் வசந்த் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் கூட ரஜினியை வசந்த் ரவி சந்தித்திருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . மேலும் பீஸ்ட் படத்தில் சொதப்பியதால் நெல்சன் ஜெயிலர் படத்தின் கதையை செதுக்கி வருகிறார். இப்படம் குறித்த அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Trending News