2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை தோலுரித்துக் காட்டி தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஹெச் வினோத்.
இந்த படத்திற்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்த நிலையில், அவர் இயக்கிய அடுத்த படமான கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று வசூலில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் இயக்கிய வினோத், தற்போது அஜித்தின் 61-வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அஜித்தின் 2 படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறி இருக்கும் இவர், இந்த படத்திற்கு பிறகு உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதன்முதலாக கமலஹாசன்-ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் உருவாகிறது. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளம் இயக்குனர்களின் படங்களை தயாரிப்பதில் கமல் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்.
ஆனால் தற்போது அரசியல் பின்னணியில் வினோத் எழுதி உள்ள கதை பிடித்துப்போக, அந்த படத்தில் கமல் நடிக்க கமிட்டாகியுள்ளார். முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கமல், அதன்பிறகு விக்ரம் படத்தில் முழு கவனம் செலுத்தி அதில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியினால் அரசியலை விட்டு விலகி விட்டார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அரசியலின் மீது இருக்கும் ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை காட்டும் விதமாக வினோத் கூட்டணியில் கமலஹாசன் அரசியலின் ஆணிவேரை ஆட்டப் போகும் கதைக்களத்தில் நடித்துப் பின்னிப் பெடலெடுப் போகிறார்.