சினிமா இண்டஸ்ட்ரியில் மற்ற பிரபலங்களை காட்டிலும் அஜித்துக்கு ரசிகர்கள் சற்று அதிகம் தான். ஏனென்றால் நடிப்பை காட்டிலும் அவருடைய நல்ல குணம் பலரை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அஜித்தை பற்றி பிரபல மாஸ் வில்லன் ஒருவர் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.
அதாவது 21 வருடத்திற்கு முன்பு அஜித்துடன் நடித்த அவர் தற்போது ஏகே 61 படத்தில் நடித்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் தளத்தில் அஜித்துடன் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை தனியார் சேனல் ஒன்றில் அந்த வில்லன் நடிகர் பகிர்ந்துள்ளார்.
அதாவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த தீனா படத்தில் நடித்த மகாநதி சங்கர் தான் அவர். இந்நிலையில் கிட்டத்தட்ட 21 வருடம் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்.
முதன்முதலாக அஜித்தை ஒரு விளம்பரத்தில் மகாநதி சங்கர் சந்தித்துள்ளார். அதன்பிறகு அஜித்தின் அமர்க்களம் படத்தில் மகாநதி சங்கர் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு தீனா படத்தில் கிடைத்துள்ளது. அதில் ஒரு பாடலில் அஜித்தை தல என்று முதன்முதலில் மகாநதி சங்கர் தான் அழைப்பார்.
அதன்பிறகு தல என்பதே அஜித்துக்கு பெயராக மாறியது. ஆனால் தற்போது அஜித்தே தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பேசியிருந்தா மகாநதி சங்கர், ஏகே 61 படப்பிடிப்பு தளத்தில் அஜித் தீனா படத்தின் போது காட்டிய அன்பை விட அதிகமாக காட்டி இருந்தார்.
மேலும் அஜித்தின் நட்பு, பழக்கம் எல்லாமே இரட்டிப்பாகி கொண்டு தான் போகிறது. ஒரு நல்ல மனிதர் அஜித் என மகாநதி சங்கர் பாராட்டினார். மேலும் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது மிகப் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.