ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஸ்டேட் விட்டு ஸ்டேட் லிஸ்ட் போட்டு தூக்கும் லோகேஷ்.. வாரிசுக்கு முன்பே உறுதுயான தளபதி-67 ரிலீஸ் தேதி

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் இந்த படம் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் அது குறித்த அப்டேட் செய்திகளுக்காக விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது தளபதி 67 திரைப்படத்தை பற்றிய ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் வரும் நவம்பர் மூன்றாவது வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக லோகேஷ் பிரபல நடிகர்களை வளைத்து போட்டுள்ளார். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த திரைப்படத்தில் இணைய இருக்கிறார். அவரை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தவிர ஆக்ஷன் கிங் அர்ஜுனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அர்ஜுனுக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்துள்ளதால் விரைவில் அவரும் இந்த படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதனால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே லோகேஷ் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கும் தளபதி 67 அடுத்த வருட ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. ஆயுத பூஜைக்கு முந்தின வாரத்தில் வெளியிடலாம் அதன்மூலம் அமோகமாக கல்லா கட்டலாம் என்பதுதான் பிளான். இதனால் லோகேஷ் தற்போது சூட்டிங் தொடர்பான அடுத்த கட்ட வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளார்.

தளபதி 67 குறித்து வெளியாகியிருக்கும் இந்த அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மற்றொரு சர்ப்ரைசும் இந்த படத்தில் இருக்கிறதாம். அது என்ன என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News