வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சீரழியும் சின்னத்திரை, முத்த காட்சியில் சந்தி சிரித்த ராஜா ராணி.. சிங்கிள்ஸ் சாபம் உன்ன சும்மா விடாதுடா ஆதி!

தற்போது சினிமாவை காட்டிலும் சீரியல்கள் மிக மோசமான காட்சிகள் எடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டுக் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் சின்னத்திரை தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வருவதால் எல்லோரும் முகம் சுளிக்கும் படியாக உள்ளது.

தொடர்ந்து இதுபோன்று சின்னத்திரை தொடர்களில் அரங்கேறி வந்த நிலையில் தற்போது ராஜா ராணி தொடரில் முத்தக்காட்சியை வைத்துள்ளனர். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணுக்கு முன்னுதாரணமாக ராஜா ராணி 2 தொடர் எடுக்கப்பட்டது.

Also Read: ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. ராஜா ராணி 2 நடிகையின் பகீர் குற்றச்சாட்டு

ஆனால் தற்போது இத்தொடரில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் கேலிக்கூத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் தனது மகன்களை நன்றாக வளர்த்ததாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் சிவகாமி. தற்போது அவரின் கடைசி மகன் ஆதி தனது காதலியை பார்க்க அவரது வீட்டுக்குச் செல்கிறார்.

அங்கு எல்லை மீறும் முத்தக்காட்சிகள் இடம் பெறுகிறது. பார்ப்பவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் இந்த காட்சிகளை சீரியலில் எப்படி தான் வைத்தார்களோ. பல குடும்பங்களை சீரியல்கள் சீரழிக்கிறது என மேடைப் பேச்சாளர்கள் அடிக்ajaகடி சொல்கின்றனர்.

அந்த காலத்தில் மாமியார், மருமகள் சண்டையை மூட்டி விடும் விதமாக சீரியல்கள் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சமுதாயத்தை சீரழிக்கும் விதமான காட்சிகளை கொஞ்சமும் தயக்கமில்லாமல் சீரியல்களில் எடுத்து வருகிறார்கள்.

Also Read: ஹாலிவுட்டை மிஞ்சிய தமிழ் சினிமா.. இளைஞர்களை சீரழிக்கும் பலான காட்சிகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த சீரியலில் எல்லை மீறிய முத்தக் காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர். இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்த சிங்கிள் பசங்க எங்கள் சாபம் உன்னை சும்மா விடாது என ஆதியை சபித்து உள்ளனர்.

raja-rani-2

Also Read: சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்றாங்க.. கடைக்குட்டி சிங்கம் பட நடிகைக்கு நடந்த கொடுமை

Trending News