எம்ஜிஆர் காலத்திலிருந்தே பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கொடி கட்டி பறந்தது ஏவிஎம் நிறுவனம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தயாரித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தது. பல நடிகர்களின் ஹிட் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களையும் இந்நிறுவனம் தயாரித்து கொடிகட்டி பறந்தது. ஆனால் சிவாஜி படத்திற்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் இந்நிறுவனத்தால் தலை தூக்க முடியாமல் போனது.
Also Read : மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஏவிஎம்.. தமிழ் ராக்கர்ஸை மிரட்ட வரும் கூட்டணி
அதிலும் விஜய் நடிப்பில் 2009-ல் வெளியான வேட்டைக்காரன் படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. ஆனால் இப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததால் இந்நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம். ஆனால் இப்படத்தின் கதாநாயகன் விஜய் எந்த உதவியும் ஏவிஎம் நிறுவனத்திற்கு செய்யவில்லை.
இந்நிலையில் தற்போது ஏவிஎம் நிறுவனம் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரை தயாரித்துள்ளது. இதில் விஜய் மீது உள்ள 13 வருட பகையைத் தீர்த்துக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
Also Read : 4 தலைமுறைகளாக நம்பர் ஒன்னில் இருக்கும் ஏவிஎம்.. சிவாஜி படம் தான் எங்கள் முதல் அஸ்திரம்
அதாவது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் விஜய்யை மோசமாக சித்தரிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது தந்தை இயக்குனர் என்பதால் அவரின் மூலம் பெரிய ஆளான ஒரு நடிகர் போல இப்படத்தில் ஒருவரை காண்பிக்கிறார்கள். விஜய் நடிக்கவிருந்த கருடா படத்தின் பெயரும் இப்படத்தில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே விஜய்யை அவமானப் படுத்துவதற்காக இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பது போன்று தமிழ் ராக்கர்ஸ் படத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. மேலும் தற்போது விஜய் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஒரு மாசான இடத்தில் உள்ளார். இந்நிலையில் அவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் விஜய்யுடன் உள்ள விட்ட குறை தொட்ட குறையை ஏவிஎம் நிறுவனம் பழிதீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
Also Read : தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!