சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கதை கிடைக்காமல் ஒரே சம்பவத்தை உருட்டும் இயக்குனர்.. ஹேமாவுக்காக பாரதி எடுத்த முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது லட்சுமி பாரதியிடம் நீங்கள் தான் என் அப்பா என்று சொன்னதால் கடுப்பான பாரதி லட்சுமியை வேறு ஸ்கூலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளார்.

ஏனென்றால் ஒரே வகுப்பில் படிக்கும் லட்சுமி ஹேமாவிடம் உண்மையைச் சொல்லி விடுவார் என்ற பயத்தில் பாரதி இவ்வாறு முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் இதே ஸ்கூலில் தான் ஹேமா படிக்க வேண்டும் என பாரதியிடம் கண்ணம்மா சவால் விட்டுள்ளார்.

Also read : சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாக்யா குடும்பம்.. வில்லி அவதாரம் எடுக்கும் சக்காளத்தி

இந்நிலையில் தற்போது ஒரு உணர்ச்சிகரமான புரோமோ வெளியாகி உள்ளது. அதாவது பாரதியின் ஹேமாவை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வந்துள்ளார். ஏனென்றால் ஹேமாவிற்கு டிசி வாங்குவதற்காக வந்துள்ளனர்.

இந்நிலையில் லட்சுமி பாரதியை சந்தித்து ஹேமா எந்த ஸ்கூலில் படிக்க வையுங்கள் என கதறுகிறார். ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்காத பாரதி ஆபிஸ் ரூமுக்கு சென்று ஹேமாவின் டிசியை வாங்கிக் கொண்டு வருகிறார்.

Also read : பாக்யாவை குத்தி கிழிக்கும் பிள்ளைகள்.. சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி

அதன்பின்பு ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அழுகின்றனர். இதைப் பார்க்க முடியாத பாரதி கடைசியில் மனம் மாறி டிசியை கிழித்து விடுகிறார். இதை தூரத்திலிருந்த கண்ணம்மாவும் பார்த்து ரசிக்கிறார்.

இதனால் மீண்டும் பழையபடி இதே கதையை உருட்ட இருக்கிறார் இயக்குனர். ஒருவழியாக இப்ப தான் வெண்பாவிற்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் விரைவில் கண்ணம்மா பாரதி இருவரும் இணைந்து கதையை முடிப்பார்கள் என்றால் இழுத்துக்கொண்டே செல்கிறார்.

Also read : பாரதியால் குடிபோதையில் கற்பை இழந்த வெண்பா.. என்னடா இது மானங்கெட்ட சீரியல இருக்கு

Trending News