விஜய் தேவாரகொண்டாவின் நடிப்பில் சமீபத்தில் லிகர் திரைப்படம் வெளியானது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவான அந்த திரைப்படம் தமிழ், கன்னடம் உட்பட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டது. ஏகப்பட்ட செலவு செய்து புரொமோஷன் செய்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
ஆனால் இப்போது படம் வெளியாகி பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தில் புதிதாக எந்த சுவாரசியமான காட்சிகளும் இல்லை என்பதுதான் பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இதனால் லிகர் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே தோல்வி படமாக மாறி உள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் லிகர் திரைப்படத்திற்கு கிடைக்கு ரேட்டிங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஐ.எம்.டி.பி இந்த படத்திற்கு 10க்கு 1.7 ரேட்டிங் கொடுத்துள்ளது.
இது அண்ணாச்சியின் நடிப்பில் வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்திற்கு கிடைத்த ரேட்டிங்கை விட மிகவும் குறைவானதாகும். கடந்த மாதம் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஏகப்பட்ட பணத்தை செலவு செய்து தயாரித்து நடித்திருந்த தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவு கணிசமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் படத்தை பார்த்து சிரித்து மகிழ்வதற்காகவே ரசிகர்கள் அடுத்தடுத்து திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்தனர். இதனால் படத்தின் கலெக்ஷன் ஓரளவு லாபகரமாகவே இருந்தது.
அதனால் அண்ணாச்சி பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும் இந்த படத்திற்கு ஐ.எம்.டி.பி 2.6 ரேட்டிங் கொடுத்திருந்தது. ஆனால் லிகர் படத்தின் நிலைமை தற்போது தி லெஜெண்ட் படத்தை விட படுமோசமாக இருப்பது தான் பரிதாபம். அந்த வகையில் அண்ணாச்சி விஜய் தேவரகொண்டாவை ஓரம் கட்டி சாதித்துள்ளார்.