விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட இறுதியில் அதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் விஜய் சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம்.
நடிகர் விஜய் தன்னுடைய வருமானத்தை சொகுசு பங்களா, பண்ணை வீடு ஆகியவற்றில் முதலீடு செய்து வருவது வழக்கம். அந்த வகையில் அவர் ஏகப்பட்ட இடங்களை வாங்கி போட்டிருக்கிறார். அதில் லேட்டஸ்டாக அவர் கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி போட்டிருக்கிறார்.
சகல வசதிகளையும் உள்ளடக்கிய அந்த வீட்டில் தான் அவர் இனிமேல் தன்னுடைய அலுவலக சம்பந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். கூடிய விரைவில் அவருடைய ஆபீஸ் அந்த புது வீட்டிற்கு மாற்றப்பட இருக்கிறதாம்.
மேலும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் ஆர்யாவும் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம். ரியல் எஸ்டேட் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் திரைப்பிரபலங்கள் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவதை வழக்கமாக்கி வருகின்றனர்.
இது அவர்களுக்கு ஒரு நல்ல முதலீடாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் தற்போது இவ்வளவு கோடி கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.