தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பாரதிகண்ணம்மா.. பரபரப்பான திருப்பங்கள்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் மருத்துவமனையில் முக்கிய அமைச்சர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரைக் குறிவைத்து தீவிரவாதிகள் பலரும் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

மேலும் துப்பாக்கி முனையில் அங்கிருக்கும் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தீவிரவாதிகள், அரசாங்கத்திற்கு 4 கோரிக்கையை வைக்கின்றனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இங்கிருக்கும் அனைவரையும் கொன்று விடுவேன் என்று கண்ணம்மாவிடம் அந்த தீவிரவாதி முகத்திற்கு நேராக சொல்லி பயம் காட்டுகிறார்.

கண்ணம்மா மற்றும் கண்ணம்மாவின் மகள் லட்சுமி, சௌந்தர்யாவின் இளையமகன் அகிலன், அஞ்சலி உள்ளிட்ட 4 பேரும் மருத்துவமனையில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கின்றனர். இதனால் மிகுந்த கலக்கம் அடைந்த சௌந்தர்யா தன்னுடைய குடும்பத்தினருடன் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்களே என கலங்குகிறார்.

உடனே பாரதி அவர்களை மீட்டு வருவதாக வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கிளம்புகிறார். இதற்கிடையில் கண்ணம்மா தீவிரவாதிகளிடமிருந்து அனைவரையும் தப்பிக்க வைப்பதற்காக உள்ளிருந்து முயற்சி செய்யப் போகிறார்.

வெளியே பாரதி கண்ணம்மாவின் திட்டம் என்ன என்பதை அறிந்து கொண்டு அவருக்கு துணையாக இருந்து, தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடிக்க போகின்றனர். ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலில் சென்னையில் ஒரு நாள் படத்தை அப்படியே போட்டு கண்டித்தனர்.

தற்போது நாகர்ஜுனா நடிப்பில் வெளியான பயணம் படத்தையும் ரசிகர்களுக்கு போட்டு காட்டுகின்றார்கள் போல தெரிகிறது. இப்படி விஜய் டிவி தொடர்ந்து படங்களை காப்பி அடித்து கதையை ஓட்டுவதற்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியலை ஊத்தி மூடலாம் என்று நெட்டிசன்கள் பங்கம் செய்கின்றனர்.