தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வளர்ந்திருக்கும் சந்தானம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு உள்ளிட்ட சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
ஆனால் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவியது. இதனால் சந்தானம் இனிமேல் அவ்வளவுதான் என்ற ரீதியில் அனைவரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்தும் கூட சந்தானத்திற்கு அடுத்தடுத்த படங்கள் வர ஆரம்பித்தது.
அந்த வகையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் குளுகுளு என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த திரைப்படம் ஓடவில்லை. இருந்தாலும் மனம் தளராத சந்தானம் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
அவருக்கு மட்டும் எப்படி படங்கள் புக் ஆகிறது என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் சந்தானத்தின் மாஸ்டர் பிளான் இருக்கிறது. என்னவென்றால் அவரின் முந்தைய படங்களை எல்லாம் தயாரித்தது அவருடைய நண்பர்கள்தான்.
அவர்களை தயாரிப்பாளர்களாக நியமித்த சந்தானம் பைனான்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர்தான் தயார் செய்தாராம். இதை வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் பெயருக்கு தான் தயாரிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த கண்ட்ரோலும் சந்தானத்திடம் தான் இருந்துள்ளது.
இதன் மூலம் அவர் தனக்கு மார்க்கெட் இருக்கிறது என்று திரையுலகில் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டார். தற்போது மேலும் ஒரு விஷயத்தை அவர் செய்திருக்கிறார். அதாவது சந்தானத்தை இனிமேல் சாண்டா என்று தான் அழைக்க வேண்டுமாம்.
சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் தங்கள் பெயரை சுருக்கி வைத்துக் கொண்டது போல் சந்தானமும் பெயரை சுருக்கி உள்ளார். இனி வரும் திரைப்படங்களில் எல்லாம் அவருடைய பெயர் இப்படித்தான் போடப்படுமாம். படம் ஃப்ளாப் ஆனாலும் இவருடைய அலப்பறை தாங்கலையே என்று இவரை பார்த்து கோடம்பாக்கத்தில் பலரும் பேசி வருகின்றனர்.