90களில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்த குஷ்பூ தற்போது மீண்டும் சினிமாவில் ரவுண்டு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய 51 வயதில் 20 வயது கதாநாயகி ரேஞ்சுக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. குஷ்பூ லண்டனில் இருந்தபடி மாடல் உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லண்டனில் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டீர்களா? என்று கேட்டிருக்கின்றனர்.
அதற்கு குஷ்பு அவருடைய சோசியல் மீடியாவில் விளக்கமளித்திருக்கிறார். லண்டனில் வீடு வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், அவர் சொந்தமாக வீடு வாங்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். தற்போது இலண்டனில் ஜாலியாக ஹாப்பியா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் தற்போது குஷ்பூ முக்கியமான கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருவதால், இனிமேல் முழு நேரமாக சினிமாவில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார். இதற்கான கதைகளையும் கதாபாத்திரங்களையும் இயக்குனரிடம் கேட்டு வருவதாக கூறி வருகின்றனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது கூட குஷ்புவிற்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே அந்த அளவிற்கு இளமையாகத் தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். கடைசியாக குஷ்பூ அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு முறைப் பெண்ணாக நடித்திருந்தார்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும் இனி வரும் படங்களில் குஷ்புவை சின்னத்தம்பி குஷ்பூ போலவே ஸ்லிம்மாக பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.