அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மஞ்சு வாரியர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் இப்படத்தின் டைட்டிலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்காக அஜித்துக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
Also read : அடுத்தடுத்து வெளிவரும் போட்டோவால், அஜித்திற்கு வெடித்த பிரச்சனை.. இப்படி எல்லாமா பண்றது
இந்நிலையில் அஜித்தின் 63 வது திரைப்படம் பற்றிய ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அவரின் ஏகே 63 திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று பரபரப்பு செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி உறுதியாகி இருக்கிறது.
அஜித், விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார். இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ஐந்தாவது முறையாக இணைய இருக்கிறது.
தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கும் சிறுத்தை சிவா அதை முடித்துவிட்டு அஜித்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. பொதுவாகவே அஜித்துக்கு சன் பிக்சர்ஸ் உடன் செட் ஆகாது.
Also read : நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகர் ஏகே … பிராடு சிட்டிசன் அஜித் என்னும் ஹாஸ்டேக் டிரண்ட்
ஆனால் சிறுத்தை சிவா தான் இரண்டு தரப்பிற்கும் இடையே பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு தான் இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது. மீண்டும் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.
திரையுலகில் எத்தனையோ திறமையான இயக்குனர்கள் இருக்கும்போது ஒரே இயக்குனருக்கே அஜித் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது. மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்கு கதறல் என்று பெயர் வையுங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
Also read : கொஞ்சம் கூட மதிக்காத அஜித்.. மொத்த வித்தையையும் பாலிவுட்டில் களமிறக்கி வெற்றி பெற்ற இயக்குனர்