ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

அதிக பட்ஜெட்டில், 23 வருஷமா முக்கியும் வெளிவராத சிம்ரனின் படம்.. அப்பவே மூனே முக்கால் கோடியா!

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை சிம்ரன். அப்போதைய காலகட்டத்தில் இடுப்பழகி சிம்ரனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இவர் நடிப்பில் உருவான ஒரு படம் 23 வருடங்கள் ஆகியும் வெளியாகாமல் உள்ளது. அதாவது பி வாசு, மணிவண்ணன் போன்ற இயக்குனர்களுடன் பல வருடங்களாக உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் நந்தகுமார். இவர் தமிழில் தென்னவன், ஜாம்பவான், கல்கண்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் அந்த காலத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

Also Read :ரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்த 6 நடிகர்கள்.. சிம்ரன் அழகில் மயங்கிய வாலி அஜித்

கோடீஸ்வரன் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தை தயாரிக்க குஞ்சுமோன் முன் வந்தார். அப்போது விஜய், அஜித் போன்ற நடிகர்களுள் ஒருவரை வைத்த படம் இயக்க திட்டம் திட்டி இருந்தனர். இயக்குனர் விஜயிடம் கதை சொல்லி உள்ளார். விஜய்க்கும் இப்படத்தின் கதை பிடித்த போக நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அப்போதே இப்படத்தின் பட்ஜெட் 2 கோடிக்கு அதிகமாக இருந்தது. இதனால் யாரும் அப்போது விஜய் நம்பி இவ்வளவு பணத்தை போட முன்வரவில்லை. அதன் பின்பு அஜித்திடம் சொல்ல அவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லி உள்ளார். இதனால் அஜித் தரப்பு தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர்.

Also Read :வில்லி ரோல் பண்ணி கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. ஆரம்பித்து வைத்த சிம்ரன்

ஆனால் குஞ்சுமோன் இப்படத்தை தயாரிப்பதாக சொன்னவுடன் அஜித்தும் பின் வாங்கி விட்டார். அதன்பின்பு குஞ்சிமோன் தனது மகனை கதாநாயகனாக வைத்து இப்படத்தை தயாரித்தார். மேலும் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்தில் கரிஷ்மா கபூர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். கோடீஸ்வரன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி செலவானது தான். மொத்தமாக படத்தின் பட்ஜெட் முனே முக்கால் கோடியாகும். மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆல்பம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. குஞ்சுமோனின் நிதி நெருக்கடியால் கோடீஸ்வரன் படம் தற்போது வரை வெளியாகாமல் போனது.

Also Read :ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருக்கும் சிம்ரன்.. இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது

- Advertisement -spot_img

Trending News