செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் வேகமெடுக்கும் ஏகே 61.. பம்பரமாக சுழன்று நடிக்க போகும் அஜித்

அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

பரபரப்புடன் சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெறுகிறதா என்ற ஒரு சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. ஏனென்றால் அஜித் கடந்த இரண்டு மாதங்களாகவே பைக்கில் ஊர் சுற்றுவது, தொலைதூர பயணம் செய்வது என்று தன்னுடைய நேரத்தை செலவு செய்து வருகிறார்.

Also read:விஜயுடன் மோத பயந்த அஜித்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா ?

அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளிவந்து வைரலானது. இதை பார்த்த பலரும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் தள்ளி போடப்பட்டுள்ளது என்று நினைத்து வந்தனர். இந்நிலையில் திடீரென படக் குழுவினர் அனைவரும் பாங்காக் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அங்குதான் சில குறிப்பிட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 35 முதல் 40 நாட்கள் வரை இடைவிடாமல் நடைபெற இருக்கிறது. மேலும் படத்தின் ஷூட்டிங்கை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று பட குழுவினர் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.

Also read:அஜித் மேல் கடுப்பில் இருக்கும் எச் வினோத்.. அடுத்தடுத்து வரும் பிரச்சனை

அந்த வகையில் அஜித்தும் இதை ஏற்றுக்கொண்டு தற்போது தீவிரமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் அஜித் தீபாவளி பண்டிகைக்கு கூட வீட்டிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். இருப்பினும் அவர் சூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வேகமெடுத்துள்ள ஏகே 61 வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தயாரிப்பாளர் போனி கபூர் தீவிரமாக செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் டைட்டிலும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read:போனி கபூருக்கு ஏற்பட்ட அவமானம்.. தாங்க முடியாமல் பைக்கில் சென்ற அஜித்

Trending News