பிளான் போட்டு சொதப்பிய பாரதி.. குடும்பத்தையே சிக்கலில் மாட்டிவிட்ட முட்டாள் டாக்டர்

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் அப்பாவி பொதுமக்களையும், பாரதிகண்ணம்மா குடும்பத்தினரையும் மருத்துவமனையில் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகள், அரசாங்கத்திடம் தங்களது முதல் கோரிக்கையான தீவிரவாதி செல்வத்தை சாதுரியமாக விடுவிக்க வைத்துவிட்டனர்.

இதன் பிறகு அவர்களது அடுத்தடுத்த கோரிக்கையை வரிசையாக நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில் பெரிய பிளான் போடுகின்றனர். இவர்களது பிளானை முறியடிக்க வேண்டும் என்பதற்காக பாரதி அவர்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களில் மயக்க மருந்தை கலந்து விடுகிறார்.

இதனால் சில தீவிரவாதிகள் மயங்கி விடுகின்றனர். அப்போது பாரதியும் அவருடைய தம்பி அகிலன் இருவரும் ஹீரோயிசம் காட்டி அந்த தீவிரவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்கின்றனர். ஒருகட்டத்தில் அசால்டாக இருந்துவிடும் பாரதி தீவிரவாதிகளின் தலைவன் கையில் சிக்குகிறார்.

தீவிரவாதிகள் பாரதி மற்றும் அகிலன் இருவரையும் துவைத்து எடுக்கின்றனர். பிறகு சென்ட்ரல் மினிஸ்டரின் ஹார்ட் ஆபரேஷன் தற்போதுதான் நடந்து முடிந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்தினால் பாரதியை உயிருடன் வைத்திருக்கிறேன் என வெளியிலிருக்கும் போலீஸிடம் பாரதி போட்ட ப்ளான் சொதப்பிய விசயத்தை தெரிய படுத்துகிறார் தீவிரவாதிகளின் தலைவன்.

இதன்பிறகு வசமாக சிக்கிக் கொண்ட பாரதி இனி என்ன செய்வது என மற்றொரு பிளானை போடுகிறார். தற்போது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தீவிரவாதிகள் கண்ணம்மா மற்றும் அவர்களது மகள்கள் மீது துப்பாக்கியை வைத்து கடுமையாக மிரட்டுகின்றனர்.

பிள்ளைகளும் பயந்துபோய் உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை போட்ட திட்டத்தை சரியாக செயல்படுத்தாத முட்டாள் பாரதி, மற்றொரு பிளான் போட்டு அதையும் சொதப்ப தான் போகின்றார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.