செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சத்யராஜ் போல் எல்லா படங்களிலும் தலைகாட்டும் நடிகர்.. சமீபத்தில் கலக்கும் பழைய வில்லன்

80களில் வில்லனாக தனது சினிமா பயணத்தை துவங்கிய சத்யராஜ், அதன்பிறகு கதாநாயகனாகவும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் சத்யராஜ் இல்லாத படங்களே இருக்காது. அந்த அளவிற்கு எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை தன்னுடைய கேலி, கிண்டல் நக்கலான பேசினால் மகிழ்வித்து கொண்டிருப்பார். இதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

Also Read: சோறு போடுங்க, தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க.. மறைமுகமாக தாக்கி பேசிய சத்யராஜ்

இவர் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், சத்யராஜ் ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்குவார். ஆனால் இப்போது அவர் இடத்திற்கு வருகிறார் பழைய வில்லன் ஆன சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

கிட்டத்தட்ட சரத்குமாரும் சத்யராஜும் ஒரே மாதிரியாகத்தான் தனது சினிமா பயணத்தை துவங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சரத்குமாரும் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்களை மிரட்டினார்.

Also Read: ஹீரோ வாய்ப்பு வேண்டாம் என ஒதுங்கிய 6 பழைய காதாநாயகர்கள்.. வாய்ப்பு வந்தும் தெறித்து ஓடிய சத்யராஜ்

அதன்பிறகுதான் இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார் டாப் ஹீரோ லிஸ்டில் இருந்தார். சமீபத்தில் சரத்குமார், சத்யராஜ் போலவே எல்லா படங்களிலும் நடித்து வருகிறார்.

கொஞ்ச காலம் அரசியலில் தீவிரமாக செயல்பட்ட சரத்குமார் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி கௌரவத் தோற்றம், ஹீரோயினின் தந்தை போன்ற குணச்சித்திர வேடங்களில் கச்சிதமாக நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: சரத்குமார், சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறினாங்க.. ஆனா ஹீரோவாக இருந்து விலனாக மிரட்டிய ஒரே நடிகர்

Trending News