செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நம்ம வச்சு கழுத்தை அறுத்துட்ட மீனா.. சொத்தை ஆட்டைய போட இப்படி ஒரு பிளானா?

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீட்டை மீனாவின் அப்பா ஜனார்த்தனுக்கு எழுதிக் கொடுக்க வந்த நிலையில் மூர்த்தி குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது அந்த வீட்டை தனது மகள் மீனாவின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய ஜனார்த்தன் முடிவு செய்துள்ளார். இதைக் கேட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைகிறது. அதன் பின்பு எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவளுக்கு தானே செய்யப் போறேன் என ஜனார்த்தன் அனைவரையும் சமாதானப்படுத்துகிறார்.

Also Read :சந்தேக புருஷனுக்காக உயிரை விட துணிந்த கண்ணம்மா.. சினிமாவை மிஞ்சும் சீரியஸான சீரியல் காட்சிகள்

மேலும் எல்லோரும் ஜனார்த்தன் பெயரில் தான் வீடு ரி பத்திரப்பதிவு ஆகும் என ரிஜிஸ்டர் ஆபீஸ் வரை அழைத்து வந்து மீனா நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார். அதன் பின்பு மீனா பெயரிலேயே பாண்டியன் ஸ்டோரின் பூர்வீக வீடு பத்திரப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் ஜீவாவிடம் எனது மகள் பிறந்த பிறகுதான் நான் முன்னுக்கு வந்தேன். இதனால் இந்த சொத்தை என் மகள் பெயரில் எழுத ஆசை பட்டேன் என ஜனார்த்தன் கூறுகிறார். எல்லோரும் இன்னைக்கு எங்க வீட்டுல தான் சாப்பிடணும் என ஜனார்த்தன் கூறுகிறார்.

Also Read :தலைகால் புரியாமல் ஆடும் சந்தியாவிற்கு செக் வைத்த மாமியார்.. லாஜிக்கே இல்ல ஊத்தி மூடுங்கபா!

ஆனால் கதிர் மற்றும் முல்லை கடையில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விடுகின்றனர். மூர்த்தியும் முதலில் நான் வரவில்லை என மறுக்கிறார். தனம் சமாதானம் செய்த பிறகு ஜனார்த்தன் வீட்டுக்கு வர மூர்த்தி சம்மதிக்கிறார். எல்லோருக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்துள்ளார் மீனாவின் அம்மா.

ஏற்கனவே ஓவர் ஆட்டம் போடும் மீனா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தன் பெயரில் பதிவாகியுள்ளதால் என்னென்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடர் வர இருக்கிறது. இதனாலேயே அடிக்கடி மீனா மற்றும் ஐஸ்வர்யா இடையே சண்டை வர வாய்ப்புள்ளது.

Also Read :சைடு கேப்பில் சில்லரைத்தனமான சேட்டை செய்யும் கோபி.. விழி பிதுங்கி நிற்கும் பாக்யாவின் குடும்பம்

Trending News