திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

வானத்துக்கும் பூமிக்கும் குதித்த கதிர்.. உறவே வேண்டாம் என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சொந்தம்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீடு மீனா பெயரில் பதிவாகியுள்ளது. இதை முல்லை தனது அப்பா அம்மாவிடம் சொன்னவுடன் முல்லையின் அம்மா கொந்தளித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு மூர்த்தி, தனம், கண்ணன், ஜீவா என மொத்த குடும்பமும் உள்ள நிலையில் கதிருக்கு உண்டான பங்கை கொடுத்தே ஆக வேண்டும் என வாய்க்கு வந்தபடி முல்லையின் அம்மா பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி பங்கு வேண்டுமென்றால் கதிரை வந்து கேட்கச் சொல்லுங்கள் என கூறுகிறார்.

Also Read :மாமியார் வீசிய வலையில் சிக்கிய ஐபிஎஸ் சந்தியா.. அதிரடி ட்விஸ்ட்டில் ராஜா ராணி 2

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள எல்லோரும் கதிர் தான் இப்படி கேட்க சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். இதனால் கண்ணன் கதிரின் ஹோட்டலுக்கு சென்று நடந்த விஷயங்களை சொல்கிறார். இதை கேட்ட கதிர் உச்சகட்ட கோபம் அடைகிறார்.

அந்தச் சமயத்தில் சரியாக முல்லையின் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். யாரைக் கேட்டு அங்க போனீங்க, உங்களை யாரு போய் பங்கு கேட்க சொன்னா என்ன திட்டுகிறார். இதுக்கு மேல என் விஷயத்துல தலையிட்டீங்கனா மரியாதை கெட்டுப் போயிடும்.

Also Read :டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

நான் கடனை அடைச்சிட்டு அந்த வீட்டுக்கு தான் போகப் போறேன், எங்க அண்ணன் தான் எங்கள கஷ்டப்பட்டு வளர்த்தாரு, அவர்கிட்ட போய் பங்கு கேட்டு இருக்கீங்க, இதுக்கு மேல ஏதாவது பண்ணிங்க நான் மனுஷனாவே இருக்க என காச்சு மூச்சு என்று கதிர் கத்துகிறார்.

மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை என்று கதிரின் மாமியார் கோபித்துக் கொண்டு செல்கிறார். மேலும் அங்கு நடந்த விஷயத்தை எல்லாம் கண்ணன் வீட்டிற்கு வந்து சொல்கிறார். இதை கேட்ட தனம் சந்தோஷம் அடைந்து சீக்கிரமே கதிர் வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

Also Read :ராதிகாவை அடைய வெறிபிடித்து திரியும் கோபி.. இனிமே தான் பயங்கரமா இருக்கப்போகுது

Trending News