வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தீபாவளி ட்ரெண்டிங்கில் அதிதி சங்கர்.. எந்த ஒரு வாய்ப்பு நாளும் விடுறதா இல்ல!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அதிதி ஷங்கரின் நடிப்பு மற்றும் நடனம் பலராலும் பாராட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி விருமன் படத்தில் அதிதி பாடலும் பாடியிருந்தார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்திலும் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்த அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அதிதி சங்கருக்கு வந்த வண்ணம் உள்ளது.

Also Read : ஜாதியை பார்க்கும் சிவகார்த்திகேயன்.. வலையில் சிக்கிய அதிதி ஷங்கர்

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பெரிய ஜவுளி கடைகளில் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் பட்டையை கிளப்பி வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு, உடைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம்.

radhika-aditi-shankar

அந்த வகையில் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் முன்னணி நடிகைகளை தங்களது கடை விளம்பரத்தில் நடிக்க வைக்க போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகிகளை நடிக்க வைப்பார்கள்.

Also Read : அதிதியின் 10th மார்க் எவ்வளவு தெரியுமா? பேசாம நடிப்பை விட்டுவிட்டு டாக்டரா போயிருக்கலாம்

அந்த வகையில் தற்போது அதிதி ஷங்கர் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்து உள்ளார். பட்டாடையுடன் தங்க நகைகள் இட்டு பார்ப்பதற்கு மணப்பெண் போல அந்த விளம்பரத்தில் காட்சி அளிக்கிறார் அதிதி சங்கர். மேலும் இந்த விளம்பரத்தில் ராதிகாவும் நடித்துள்ளார்.

chennai-silks-ad

அதாவது தனது மகனுக்கு பெண் பார்க்க வந்த சமயத்தில் அதிதியின் அழகைப் பார்த்து உரைகிறார் ராதிகா. அதன் பின்பு விதவிதமான உடைகளில் அதிதி ஷங்கர் வருவது போல இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சென்னை சில்க்ஸ் விளம்பரம் தான் எல்லா தொலைக்காட்சிகளிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read : டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

Trending News