செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விளம்பரத்திற்கு மட்டும் பலகோடி செலவு செய்யும் மணிரத்தினம்.. குந்தவையை விழுந்து விழுந்து கவனிக்கும் படக்குழு

500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், அதில் நடித்த நடிகர்களான கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் சென்னை, ஹைதராபாத், மும்பை, கொச்சி, கேரளா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்

மேலும் இந்திய அளவில் கோடிக்கணக்கில் இப்படத்தின் பிரமோஷனுக்காக மட்டும் செலவு செய்து கொண்டிருக்கும் மணிரத்தினம், அதில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் லட்சக்கணக்கில் உடைகளுக்காக மட்டும் செலவாகிறது.

Also Read: பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட புரமோஷனுக்கு வரும் திரிஷா பெரும்பாலும் சேலையில் தான் வருகிறார். அதிலும் இவர் மும்பையில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெண்கல தங்க புடவையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கித் தவிக்க விடுகிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்கள் திரிஷாவின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

காஸ்ட்லியான சேலைகளில் பட புரமோஷன்களில் கலக்கும் திரிஷா

actress-trisha-cinemapettai
actress-trisha-cinemapettai

Also Read: ஏலத்திற்கு தயாராகும் குந்தவை, நந்தினியின் நகைகள்.. போட்டி போடும் நிறுவனங்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு திரிஷா பெரும்பாலும் சேலைகளையே விரும்புகிறார். அந்தப் படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் இருவரும் சோழர்கால பாணியில் விலையுயர்ந்த நகை மற்றும் உடைகளை அணிந்திருக்கின்றனர்.

அதில் தங்கம் மற்றும் ஐம்பொன் போன்ற வகைகளும் அடங்கும் ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட அந்த நகைகளின் சில கவரிங் நகைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இவர்கள் அணிந்திருந்த காஸ்ட்லியான நகைமற்றும் உடை அனைத்தும் தற்போது விற்பனைக்கு வர இருக்கிறது.

வெண்கல தங்க புடவையை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய திரிஷா

trisha-1-cinemapettai
trisha-1-cinemapettai

Also Read: பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

இன்னிலையில் அவர்கள் படத்தில் அணிந்து வந்த உடைகள் மட்டுமல்ல பட புரமோஷனுக்கு அணிந்து வரும் உடைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதிலும் சமீபத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் திரிஷா அணிந்திருக்கும் 26k மதிப்புள்ள சில்க் புடவை புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது.

Trending News