நடிகர் சினிமாவிற்கு வந்த புதிதில் எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்தார். இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு சுறுசுறுப்பா என்று மூத்த நடிகர்கள் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்பு கிடைக்க ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
அதுமட்டுமின்றி சினிமா போதாது என்று அரசியலிலும் குதித்தார். ஆரம்பத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிய நடிகர் ரசிகர்களுக்காக சுற்றி சுழன்று வேலை பார்த்தார். சரி இப்படி வேலை பார்க்கிறாரே மனுஷன் ஜெயிச்சா ஏதாவது செய்வார் என இவருக்கு ஓட்டு போட்டனர்.
Also Read : பிரபல தயாரிப்பாளரை வளைத்துப் போட்ட நடிகை.. இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு
ஆனால் அவர் தலைவராகி ஒரு புண்ணியமும் இல்லை. தற்போது வரை அவர் கொடுத்த ஒரு வாக்குறுதிகள் கூட இன்னும் நிறைவேற்ற வில்லை. அதுமட்டுமின்றி இவரின் படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர் நண்பரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் படப்பிடிப்புக்கு அந்த நடிகர் போவதில்லை. இதுகூட பரவாயில்லை அவர் தயாரிக்கும் படத்தில் கூட படப்பிடிப்புக்கு செல்லாமல் உள்ளாராம்.
Also Read : விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட டாப் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை
இந்த நடிகர் இப்போது எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை யாராலயும் புரிந்து கொள்ள முடியவில்லையாம். மேலும் ஏன் படப்பிடிப்புக்கு வரவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் பொய் கேட்டால் எனக்கு மிகப்பெரிய நட்பு வட்டாரம் இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறாம்.
சமீபகாலமாக அந்த நடிகரின் ஒரு படம் கூட இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படி சினிமா, தயாரிப்பு, அரசியல் என நாலா பக்கமும் அடி வாங்கி வருகிறார். இன்னும் சில காலம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவரது மார்க்கெட் மொத்தமாக ஊற்றி மூடிவிடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read : அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி