செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

போட்டக் கணக்கு எல்லாம் தப்பா போன பரிதாபம்.. தனுஷ் படத்தால் அந்தர் பல்ட்டி அடித்த தியேட்டர்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்த தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

மேலும் நானே வருவேன் படத்திற்கு மறுநாள் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ளது. எல்லோருமே பொன்னியின் செல்வன் படம் வெளியாவதால் தங்களது படங்களை இப்போது ரிலீஸ் செய்யாமல் தள்ளி போட்டு இருந்தனர். இதனால் தான் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகிறது.

Also Read :பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

ஏனென்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன் படத்திற்கு இருந்தது. ஆனால் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் தனுஷ் ஒரு கணக்கு போட்டு நானே வருவேன் படத்தை வெளியிட்டார்.

ஆனால் அவர் போட்ட கணக்கு எல்லாமே தப்பாக போய் உள்ளது. கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் படம் வெளியாகும் போது மற்ற நடிகர்கள் படத்தை ரிலீஸ் செய்ய பயப்பிட்டார்கள். ஆனால் அசால்டாக விஜயின் பீஸ்ட் படம் கே ஜி எஃப் படத்திற்கு போட்டியாக வெளியானது.

Also Read :வசூல் மழையில் நனைந்த நானே வருவேன் தயாரிப்பாளர்.. மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. ஆனால் கே ஜி எஃப் படம் தமிழ் சினிமாவிலும் சக்கை போடு போட்டது. இதே போல் தற்போது தனுஷ் பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக நானே வருவேன் படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டி தவிக்கிறார்.

அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது. இதனால் இப்போது நானே வருவேன் திரையிட்ட பல தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் நானே வருவேன் படத்தை திரையரங்குகளில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

Also Read :நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்

Trending News