புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

சிவாஜியே பார்த்து பிரம்மித்து போன நடிகை.. 60, 70களின் நயன்தாரா இவர்தான்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பின்னி பெடல் எடுப்பார். இவருக்கு இணையான ஒரு நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை.

ஆனால் சிவாஜியே அந்தக் காலத்தில் தன்னுடன் நடித்த சக நடிகையை பார்த்து பிரம்மித்த போய் உள்ளார். தற்போது உள்ள காலகட்டத்தில் நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கர்வம், திமிர் இருக்கும். இவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Also Read :ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

ஆனால் இப்போது நயன்தாரா போல 60,70களில் பல ஹீரோக்கள் இந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டார்கள். அவர் தான் நடிகை பானுமதி ராமகிருஷ்ணன். அந்த காலகட்டத்திலேயே நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக பானுமதி இருந்தார்.

பானுமதி பார்த்தாலே பலருக்கும் மரியாதை கலந்த பயம் இருக்கும். இந்நிலையில் சிவாஜி இவருடன் இணைந்த ரங்கூன் ராதா, தெனாலிராமன், ராணி லலிதாங்கி, அம்பிகாபதி போன்ற படங்களில் நடித்துள்ளார். பானுமதி எம்ஜிஆருடனும் நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Also Read :ஆஸ்கருக்கு போன முதல் தமிழ் படம்.. அப்பா, மகன் என சிவாஜி கணேசனின் மிரட்டல் நடிப்பு

சிவாஜி தன்னுடைய சுயசரிதையில் பானுமதியை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது பானுமதியை விட நான் சின்னப்பையன் என்றும், அப்பேர்பட்ட நடிகையுடன் நான் நடித்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன் என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பானுமதியை பாராட்டி எழுதி இருந்தார்.

தற்போதும் பல நடிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் சிவாஜிகணேசனே ஒரு நடிகையைப் பற்றி இவ்வளவு பெருமையாக எழுதியிருந்தால் அந்த நடிகை இடம் எவ்வளவு திறமை இருக்கும் என்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். சினிமா துறையில் பானுமதி பங்களித்ததற்காக அவருக்கு 2003 இல் பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

Also Read :எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

- Advertisement -

Trending News