சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ராஜராஜசோழன் இந்துவா இல்லையா? கொந்தளித்த வெற்றிமாறன்

சமீபத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இப்படத்தின் மீது பல சர்ச்சையான கருத்துக்களும் முன்வைத்து வருகின்றன.

அதில் முக்கியமாக சைவ சமண பக்தர்களின் திலகம், பட்டை உள்ளிட்ட வேறுபாடுகள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மாறாக காண்பிக்கப்பட்டதாக படம் வெளியாவதற்கு முன்பே மணிரத்னம் சில விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கம் அளித்த மணிரத்னம், படத்தில் அனைத்து வேறுபாடுகளையும் கல்கியின் நாவலை தழுவியே காண்பித்து உள்ளதாகவும், படத்தை முழுமையாகப் பார்த்தால் மட்டுமே அந்த வேறுபாடு தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Also read : விடுதலை படத்தால் பதட்ட நிலையில் இருக்கும் பிரபலம்.. வெற்றிமாறன் செய்யும் தில்லாலங்கடி வேலை

இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி அத்தனை விமர்சனங்களையும் உடைத்து தள்ளியது என்று சொல்லலாம். அப்படி இருக்கும் தருவாயில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கியமான கதாபாத்திரமான ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை விமர்சனம் செய்துள்ளார்.

உத்தம சோழனின் மகனான ராஜராஜ சோழன் தஞ்சையை ஆண்ட மாமன்னன், அவரது காலகட்டத்தில் தான் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. இதனிடையே இவரது வீரத்தையும், இவரது அண்ணன் ஆதித்த கரிகாலனின் மர்மமான மறைவு குறித்தே பொன்னியின் செல்வன் கதை வேகமாக நகரும். அப்படி இருக்கும் பட்சத்தில் ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக நம் தமிழ் சினிமாவில் காட்டி உள்ளனர் என்று இயக்குனர் வெற்றிமாறன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Also read : இந்த நாவலை படிக்க சொன்ன வெற்றிமாறன்.. மனப்பாடம் பண்ணி தேதியை கொடுத்த கமல்

மேலும் பேசிய அவர், மக்களுக்காகத்தான் கலை, மக்களை பிரதிபலிப்பது தான் கலை, அப்படிப்பட்ட கலை சரியாக இன்றைய சூழலில் கையாள வேண்டும். அப்படி கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும் என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.

நம்முடைய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக வள்ளுவருக்கு காவி உடை அணிவித்த புகைப்படம், அதேபோல் ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக காண்பித்தது ஆகட்டும் இவையெல்லாம் தொடர்ந்து சினிமாவில் அதிகளவில் நடந்து வருகிறது என வெற்றிமாறன் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

ஆனால் ஒரு சிலர் ராஜராஜ சோழன் கட்டியது தஞ்சை பெரிய கோவில் அதனுள்ளிருக்கும் கடவுளும் ஒரு இந்து கடவுள் தான் அப்படி இருக்கும்போது ராஜராஜசோழன் இந்து கடவுளை தானே வணங்கி இருப்பார். அதை சொல்வதில் என்ன தவறு என கேட்டு வருகின்றனர்.

Also read : வட சென்னை போல வெற்றிமாறன் போடும் பக்கா பிளான்.. ஆனா எதுவுமே நம்புற மாதிரி இல்லை

- Advertisement -spot_img

Trending News