ரவீந்தருக்கு போட்டியாக களத்தில் குதித்த வனிதா.. கிடுகிடுக்கும் சோசியல் மீடியா

சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் நெகட்டிவ் விஷயங்களால் வேகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருபவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர்.

சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி சோசியல் மீடியாவையே அதிரவிட்டது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் இது குறித்து தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். நடிகை வனிதா விஜயகுமாரும் நாசுக்காக சில கருத்துக்களை பதிவிட்டார்.

ஏனென்றால் அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சமயத்தில் ரவீந்தர் அதை கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது பழிவாங்கும் விதத்தில் வனிதாவும் இந்த திருமணம் குறித்து கமெண்ட் கொடுத்திருந்தார். இப்படி இவர்களுக்குள் சோசியல் மீடியாவில் எப்போதுமே சண்டையும், சச்சரவுமாக தான் இருக்கும்.

Also read:பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகும் முதல் 8 பேர்.. களைகட்டிய சீசன்6

இந்நிலையில் ரவீந்தருக்கு போட்டியாக வனிதா களத்தில் குதித்து இருக்கிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து சோசியல் மீடியாவில் பலரும் விமர்சனம் செய்வது வழக்கம்.

அதிலும் தயாரிப்பாளர் ரவீந்தர் செய்யும் விமர்சனத்திற்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஆரம்பிக்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களை ரவீந்தர் தன்னுடைய சேனலில் தொடர்ந்து பதிவிட்டு வருவேன் என்று அறிவித்திருந்தார். அதற்கு போட்டியாக வனிதாவும் தற்போது பிரபல சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

Also read:இரு காதலிகளுடன் அசத்தல் என்ட்ரி கொடுத்த பிரபலம்.. களைகட்டும் பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங்

ஏற்கனவே வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தினார். அங்கு இருக்கும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, திமிருடன் நடந்து கொள்வது என்று அவருடைய நடவடிக்கைகள் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் எகிறியது. அதனாலேயே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தன்னுடைய நேர்மையான விமர்சனங்களை கொடுக்கப் போகிறாராம். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவுக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது.

Also read:பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்