விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய்,அஜித் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் 100 கோடி பட்ஜெட்டில் தான் அசால்டாக எடுக்கப்படுகிறது. அவர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கில் போட்டிபோட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை எடுத்து படத்தை பார்த்தால் படத்தில் கதையும் இல்லை, வசனங்களும் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன .

இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழை தவிர்த்து வேறு மாநில தெலுங்கு நடிகர்கள், அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியுற்றால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தின் பாதியை தயாரிப்பாளர்களிடம் வீடு தேடி சென்று கொடுத்துவிட்டு படத்தின் தோல்விக்கு பங்கெடுத்து செல்கிறார்கள்.

ஆனால் தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் படம் வெற்றி அடைந்தாலும் சரி,தோல்வியடைந்தாலும் சரி,அவர்களின் சம்பளத்தை ஒவ்வொரு படத்திற்கும் அதிகப்படுத்தியே செல்கிறார்களே தவிர தயாரிப்பாளர்களின் நிலையை அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.இதனால் படம் தோல்வியுற்றால் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோக்கள் நஷ்டத்தை வழங்கவேண்டும் என்ற கருத்துக்களும் அண்மையில் வெளியாகிறது.

உதாரணமாக நடிகர் விஜயின் பீஸ்ட்,அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த வருடத்தில் முதல் பாதியிலேயே வெளியாகி 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடைசியில் இரண்டு திரைப்படங்களும் படு தோல்வியுற்றது. ஆனால் விஜய் மற்றும் அஜித் தங்களது அடுத்த படத்தில் 100 கோடி வரை சம்பளத்தை உயர்த்திக்கொண்டு தான் நடித்து வருகிறார்கள்.

இதில் விதிவிலக்காக ரஜினிகாந்தின் நிலையும், சிவகார்த்திகேயனின் நிலையும் தற்போது தடுமாறி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் 100 கோடியாக இருந்த அவரது சம்பளம் 85 கோடியாக இறங்கியுள்ளது.அதேபோல சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வெற்றி கொடுத்தாலும் அவரது சம்பளமும் குறைந்துதான் வருகிறது.

இந்த நிலை அஜித்துக்கும்,விஜய்க்கும் ஒருபோதும் வரவில்லை. இதற்கான காரணம் ரசிகர்கள் அவர்களுக்கு கொடுக்கும் வரவேற்பு தான் என்றாலும், இவர்களின் திரைப்படங்கள் தோல்வி அடைவதால் தயாரிப்பாளர்கள் பெருநஷ்டம் அடைவதை இவர்கள் இருவரும் கண்டுக்கொள்ளாமல் வருவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.