புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அஜித் எடுத்திருக்கும் முக்கிய முடிவு.. விக்னேஷ் சிவன் படத்திற்கு பிறகு தரமான சம்பவம்

அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்த வருகிறார். வலிமை படம் வெற்றி பெறாத நிலையில் துணிவு படத்தில் தனது முழு கடின உழைப்பையும் போட்டு வேலை செய்து வருகிறார். வினோத் படத்தை தொடர்ந்த அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்த படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் அஜித் சினிமாவில் இருந்து விலக முன்பே யோசித்தார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரசிகர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்பதற்காக மட்டுமே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Also Read :எல்லா மொழிகளியும் குறிவைக்கும் போனி கபூர்.. தீபாவளியை மறக்கடித்த அஜித்

இந்த சூழ்நிலையில் விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு அஜித் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதாவது அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் இருப்பது எல்லோரும் அறிந்தது தான். மேலும் வலிமை படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தற்போது ஏகே 62 படத்தை முடித்துவிட்டு அஜித் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் சாதித்த பிறகு தனது கனவு உலகத்தை பைக்கில் சுற்றிவர வேண்டும் என்பது அஜித்தின் ஆசை. அதற்கு இதுதான் சரியான நேரம் என்று அஜித் முடிவு எடுத்துள்ளார்.

Also Read :அஜித், விஜய் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட மீனா.. பல வருடங்களுக்குப் பின் வருந்திய சம்பவம்

தற்போது அதை நிறைவேற்றுவதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளி எடுத்து 18 மாதங்களில் 7 கண்டம், 60 நாடுகள் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட குழுவுடன் அஜித் சுற்றிவர தயாராகி வருகிறார். எப்போதுமே அஜித் நினைத்ததை நிறைவேற்றாமல் விடமாட்டார்.

இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால் ஒன்றரை வருடமாக அஜித் சினிமாவில் இல்லை என்றால் அது மிகப் பெரிய வேதனையை அவரது ரசிகர்களுக்கு அளிக்கிறது. மேலும் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி வரும் பொழுது சினிமா எப்படி இருக்கும் என்று அவருக்கே புதுமையாக இருக்கும்.

Also Read :வேறு வழியில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்த அஜித்.. தொடர்ந்து இத்தனை படங்களா?

Trending News