டாப் கியரில் செல்லும் கார்த்தி.. பட்டையை கிளப்பும் சர்தார் முதல் நாள் வசூல்

கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. ஏற்கனவே இது படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது திரைப்படமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சமுதாய பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ராசி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். அந்த வகையில் இப்போது இந்த திரைப்படம் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது.

Also read : வந்தியதேவனிடம் சிக்கி சின்னாபின்னமான இளவரசன்.. தலைகீழாய் மாறிய நிலைமை

அதிலும் இப்படத்திற்கான முதல் நாள் ஓப்பனிங்கே பலரையும் மிரட்டியது. மேலும் முதல் நாள் வசூலை வைத்து பார்க்கும் போது இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீசை கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்துடன் இணைந்து வெளிவந்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்ப பெறவில்லை.

அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவும் இப்போது சர்தார் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளதும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டுமே 3.7 கோடியாக இருக்கிறது. அதே போன்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இப்படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

Also read : வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதனால் இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்திற்கான வசூல் நிச்சயம் அதிகமாகும். இதற்கு முன்பு கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் வசூல் வேட்டை நிகழ்த்தியது. அதிலும் பொன்னியின் செல்வன் இப்போது வரை வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து கார்த்திக்கு இந்த சர்தார் திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. இதை அவருடைய ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். கார்த்தியும் இந்த மகிழ்ச்சியை தன்னுடைய டிவிட்டர் தளத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறி பகிர்ந்துள்ளார்.

Also read : எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்தியின் சர்தார்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்