வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜி பி முத்துக்கு பதிலாக களமிறங்கும் முரட்டு போட்டியாளர்.. அட இவரு லோகேஷோட செல்ல பிள்ளை ஆச்சே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களை நெருங்கிய நிலையில் நேற்று தனது மகனைப் பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாமல் தவித்து வந்த ஜிபி முத்து வெளியேற்றி விட்டார்.

இந்த சீசனில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜி பி முத்து தான். இவர் கண்டிப்பாக 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருவார் என எதிர்பார்த்த நிலையில் பாதியிலேயே வெளியேறி விட்டார்.

Also Read :ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

இதனால் தற்போது விஜய் டிவியின் டிஆர்பி குறைய அதிக வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒரு பக்கா பிளான் போட்டு தரமான போட்டியாளரை விஜய் டிவி இறக்கி உள்ளது. அதாவது இந்த சீசன் தொடங்கும் போது மன்சூர் அலிகான் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் தற்போது வையல் கார்ட் என்ட்ரியாக மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வீட்ல பாட்டி என்ற நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு அதகளம் செய்திருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவர் கலந்து கொள்ள உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read :பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

மேலும் இயக்குனர் லோகேஷ் உடைய செல்ல பிள்ளையாக உள்ளவர் மன்சூர் அலிகான். ஏனென்றால் சிறு வயதிலேயே லோகேஷ்க்கு மன்சூர் அலிகான் மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இதனால் தனது படங்களில் மன்சூர் அலிகானின் சாயல் வைத்திருப்பார்.

ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதில்லையாம். மேலும் லோகேஷ் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொள்ள உள்ளார்.

Also Read :கனத்த இதயத்துடன் வெளியேறும் ஜி பி முத்து.. கண்ணீர் மழையில் ரசிகர்கள்

Trending News