வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆபீஸரிடம் வசமாக சிக்கிய சந்தியா.. ஐபிஎஸ் கனவுக்கு பேராபத்தாய் வந்த தடை

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சிறுவயதிலிருந்து ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா அதற்கான தேர்வில் பாஸ் ஆகி, தற்போது ட்ரெயினில் இருக்கிறார். ட்ரெயினிங்கில் படு சொதப்பல் செய்யும் சந்தியா, கடைசியில் ஆபீஸரிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.

அவருக்கு அவ்வப்போது மயக்கம் ஏற்படுவதால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் சரவணனுக்கு மட்டும் சந்தியா கர்ப்பமாக இருப்பாரோ என்ற சந்தேகம் இருக்கிறது.

Also Read: போலீஸ் கெட்டப்பில் அத்துமீறும் சந்தியா.. சத்தியம் செய்ய வச்சு மாட்டிவிட்ட மாமியார்

ஆகையால் முன்கூட்டியே கர்ப்பமாக இருக்கிறார் என்பதை பரிசோதித்து பார்க்கக்கூடிய கிட் மூலம் டெஸ்ட் எடுத்து பார்க்கும்படி சந்தியாவை சொல்கிறார். அதை செய்து பார்த்ததும் பாசிட்டிவ் ரிசல்ட் வருகிறது. இந்த விஷயத்தை கண்கூடாகவே ஐபிஎஸ்  ட்ரெயினிங் ஆபீஸர் பார்த்துவிடுகிறார்.

பிறகு சரவணனிடம் போன் செய்த ஆபீசர் ‘இந்த சூழ்நிலையில் சந்தியா ட்ரெய்னிங்கில் கலந்து கொள்ள வேண்டுமா!’ என அவரை வீட்டிற்கு திருப்பி அனுப்ப பார்க்கிறார். இருப்பினும் சந்தியா மன உறுதியுடன் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையுடன் இந்த ட்ரெயினிங் முழுமையாக முடிப்பார்.

Also Read: குழந்தையை மாற்றி கேவலமான வேலை செய்த அர்ச்சனா.. ஐபிஎஸ் சந்தியாவுக்கு கிடைத்த முதல் கேஸ்

இதில் பல சவால்களை சந்தியா சந்தித்தாலும் கடைசியில் இந்த ட்ரெயினிங்-இன் முடிவில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற கோப்பையுடன் வீட்டுக்கு திரும்புவார். அவர் ட்ரெய்னிங் முடிக்கும் வரை அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் வராமல் பக்குவமாக பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலை அப்படியே அட்ட காப்பியடிக்கும் ராஜா ராணி2 சீரியலின் கதை அனைத்தும் தெரியும் என்பதால் போரடிக்கிறது, முடிச்சு விடுங்கடா சாமி என சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: படுமோசமான வேலையை பார்த்த அர்ச்சனா.. IPS ட்ரெய்னிங்கில் சிக்கிய சந்தியா

Trending News