செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய திரிஷா.. எதிரும் குந்தவை மார்க்கெட்

சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஹீரோயினாக நடித்து வரும் திரிஷா அதே இளமையுடனும், பொலிவுடன் இருக்கிறார். நடுவில் இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

அதாவது விஜய், அஜித், விக்ரம், கமல் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. இதைத்தொடர்ந்து திரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த நிலையில் அவை பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

Also Read :புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

இந்நிலையில் மற்ற மொழிகளில் நடித்து வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தற்போது இவருக்கு மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. அதாவது தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக நடிகை சமந்தா இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த சூழலில் திரிஷா ஒரு படத்திற்கு 1.5 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது புதிதாக நடிக்கும் படங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டு வருகிறாராம். அதாவது இப்போது நடிக்கும் படத்திற்கு 3 கோடி சம்பளமாக திரிஷா கேட்கிறார்.

Also Read :திரிஷா படத்தில் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

மேலும் பொன்னியின் செல்வன் படத்தால் அம்மனிக்கு மவுஸ் உள்ளதால் எவ்வளவு கோடி கொடுத்தோம் தங்களது படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இதனால் திரிஷா அடுத்த அடுத்த படங்களில் கையெழுத்திட்ட வருகிறார்.

ஆரம்பத்தில் இவ்வாறு தான் நயன்தாராவுக்கும் இடையில் மார்க்கெட் குறைந்த அதன் பிறகு தனது தரமான படங்கள் மூலம் கம்பேக் கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆக வலம் வருகிறார். அதேபோல் தற்போது த்ரிஷாவும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி தூள் கிளப்பி வருகிறார்.

Also Read :ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

Trending News