செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கதிரால் அவமானப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெடித்தது அடுத்த பூகம்பம்

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இத்தொடரில் மூர்த்தி தற்போது தனது பூர்வீக வீட்டை விற்று விட்டு, புதிதாக ஒரு வீடு வாங்க உள்ளார். அதற்கான பத்திரப்பதிவு இன்று நடக்கிறது.

புதிய வீடு மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு அண்ணன் தம்பிகள் பெயரில் பத்திரப்பதிவு நடக்க உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக கதிர் மற்றும் முல்லை ஒரு போட்டிக்காக வெளியூர் சென்றுள்ளனர். அங்கிருந்து இப்போதைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : பெரிய தியாகி இவன்.. உனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பனா இருக்க துப்பு இல்ல பாரதி

அதுமட்டுமின்றி இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லவும் முடியவில்லை. ஆகையால் முல்லை தனது அம்மாவிடம் விஷயத்தை சொல்லி மூர்த்தியிடம் சொல்லச் சொல்கிறார். ஆனால் அவர் இந்த விஷயத்தை போய் சொல்லனுமா என பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டு விடுகிறார்.

மேலும் பத்திரப்பதிவு இன்று தான் நடக்கவுள்ளது என்று தெரிந்தும் கதிர் வெளியூர் சென்றுள்ளார் என மூர்த்தி கோபமாக உள்ளார். அதன் பின்பு பத்திரப்பதிவு நேரமும் முடிந்து விட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நிலத்தை விற்கும் உரிமையாளர் அவமானப்படுத்துகிறார்.

Also Read : பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்

இனிமே நான் எப்ப வருவேனோ அப்பதான் ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்க முடியும் என கராராக பேசிவிட்டு செல்கிறார். வீட்டுக்கு வந்த மூர்த்தி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். நம்ம சொல்றத எதை தான் கதிர் கேட்கிறான். இந்த வீட்டை விட்டு போக வேணாம்னு எல்லாரும் சொல்லியும் அவன் கேட்கல.

இப்போ வேணும்னே ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வராம எங்க எல்லாரையும் அவமானப்படுத்தி விட்டான் என மூர்த்தி கொந்தளிக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு பூகம்பமாக வெடிக்கிறது. கதிர் இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் இப்போது அவர் மீது மிகுந்த கடுப்பில் மூர்த்தி உள்ளார்.

Also Read : கோபின்னு ஒரு ஆளே இல்ல, அட்ரஸ் இல்லாமல் அவமானப்படும் அங்கிள்.. அசிங்கப்படுத்தும் பாக்யா, வெறுப்பில் ராதிகா

Trending News