சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அஜித்தால் அந்த ஒரு விசியத்தில் விஜய்யை நெருங்க கூட முடியாது.. சர்ச்சையை ஏற்படுத்திய சினிமா பிரபலம்

விஜய், அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் இரண்டு ஆளுமைகளாக தற்போது பார்க்கப்படுகிறது. இந்த இருவரின் ரசிகர்கள் தான் இணையத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த சூழலில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ள துணிவு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை விட 100 திரையரங்குகள் குறைவாக வாரிசு படம் பெற்றுள்ளது.

Also Read :முதல் முறையாக ரஜினியின் கோட்டையில் நுழையும் விஜய்.. போஸ்டரை மாஸாக ரிலீஸ் செய்த லோகேஷ்

இதனால் துணிவு படம் தான் அதிக வசூல் செய்யும் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் விஜய்யின் படம் தான் எப்போதுமே வசூலில் அதிகமாக இருக்கும் என சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கூறி உள்ளார். விஜய் படங்கள் வசூல் செய்ததில் 75 சதவீதம் கூட அஜித் படங்கள் வசூல் செய்ததில்லை எனக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

இவர்கள் நடிப்பில் கடைசியாக வெளியான படத்தை எடுத்துக் கொண்டால் கூட வலிமையை விட மூன்று மடங்கு அதிகமாக பீஸ்ட் படம் வசூல் செய்திருந்தது. மேலும் இப்போது கூட விஜய்யின் வாரிசு படம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகி உள்ளது. ஆனால் துணிவு படம் தற்போது வரை வியாபாரம் ஆகவில்லை.

Also Read :விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்

இப்படம் அதிகபட்சமாக 16 இல் இருந்து 17 கோடி வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜில்லா மற்றும் வீரம் படம் வெளியாகும் போது அஜித் மற்றும் விஜய்யின் மார்க்கெட் சரிசமமாக இருந்தது. ஆனால் விஜய் தொடர்ந்து கமர்சியல் படங்கள் கொடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தார்.

அதுமட்டுமின்றி புது இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்களை கொடுத்த முதல் இடத்தை பிடித்தார். தமிழ் மொழியை தாண்டி மற்ற இடங்களிலும் விஜய்க்கு மவுஸ் உள்ளது. ஆனால் அஜித் தமிழ்நாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் வசூலில் விஜயை காட்டிலும் குறைவாக உள்ளதாக பிஸ்மி கூறியுள்ளார்.

Also Read :அஜித் சார்ன்னு கூப்பிட முடியாது.. சர்ச்சையை கிளப்பிய விஷாலின் தடாலடி பேச்சு

- Advertisement -spot_img

Trending News