ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வெளிவேஷம் போடத் தெரியாத ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

கோலிவுட் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வரும் ரஜினிகாந்த்துக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். தன் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய ரஜினி கைதட்டலுக்காக என்றுமே பொய்யான விஷயங்களை பேசியது கிடையாது. இன்று வரை வெளிவேஷம் போட தெரியாத மனிதராகவே இருக்கிறார்.

அதற்கு உதாரணமாக அவர் தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ரஜினி எப்பொழுதுமே எந்த மேடையில் பேசினாலும் தனித்துவமான ஒரு வார்த்தையை குறிப்பிடுவார். அதாவது என்னை வாழ வைத்த தமிழ் மக்களே என்று தான் அவர் தன்னுடைய பேச்சை தொடங்குவார்.

Also read : சூப்பர் ஸ்டாரை காரணம் காட்டி ஐஸ்வர்யா கொடுக்கும் பிரஷர்.. கட் அண்ட் ரைட்டாக பேசும் லைக்கா

அவருடைய இந்த வார்த்தைக்கு எப்போதுமே ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் தற்போது புனித் ராஜகுமாருக்கு வழங்கப்படும் விருது விழாவிற்காக பெங்களூர் சென்றார். கடந்த வருடம் மறைந்த பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது நேற்று வழங்கப்பட்டது.

அதில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசச் சென்ற அவர் என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் என்று குறிப்பிட்டு தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் நடிக்க வந்து இங்கேயே செட்டிலான சூப்பர் ஸ்டாரின் பூர்வீகம் கன்னடா தான். இதனாலேயே தமிழ்நாட்டில் சிலர் ரஜினி குறித்து சில சர்ச்சையான கருத்துக்களையும் கூறுவார்கள்.

Also read : ரஜினிக்கு இன்னும் கொட்டிக் கொடுக்கும் 5 படங்கள்.. டிவியில் போடுவதற்கு இவ்வளவு கோடிகளா

ஆனால் எப்போதுமே ரஜினி தமிழக மக்கள் தான் முக்கியம் என்று சொல்லிலும், செயலிலும் நிரூபித்து வந்தார். அந்த வகையில் தற்போது பெங்களூரில் அவர் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பெருமையாக பேசியதை கேட்டு கன்னடம் மக்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

இங்கு வந்து எதற்காக தமிழ் மக்களை பற்றி பேசுகிறீர்கள் என்று எதிர்ப்பு குரல் கொடுக்காமல் கன்னட மக்களும் பெருந்தன்மையாக நடந்து கொண்டது நெகிழ்ச்சியான தருணமாக மாறி இருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் அந்த பேச்சுக்கு அவர்கள் கொடுத்த வரவேற்பும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெறும் கைத்தட்டலுக்காக வெளிவேஷம் போடாமல் அங்கேயும் சென்று தமிழ் மக்களை பற்றி பேசி ரஜினி உண்மையில் நான் சூப்பர் ஸ்டார் தான் என்று நிரூபித்து இருக்கிறார்.

Also read : பொன்னியின் செல்வன், விக்ரமுக்கு செக் வைக்கும் ரஜினி.. அதிகாரப்பூர்வமாக 2 குட் நியூஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

Trending News