தலைகணத்தில் தலைகால் புரியாமல் ஆடும் போட்டியாளர்.. குட்டு வைக்க போகும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் சிலருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகள் படுமோசமாக இருப்பதால் ரசிகர்கள் அவர்களை சோசியல் மீடியாவில் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரு போட்டியாளராக இருந்தவர் தான் தனலட்சுமி.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவது, சம்பந்தமில்லாமல் உளறுவது என்று இவருடைய நடவடிக்கைகள் பார்ப்பவர்களுக்கு கோபத்தை கொடுத்தது. ஆனால் சில நாட்களாக அவர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். அதிலும் சென்ற வாரம் அவர் மேல் தேவையில்லாமல் பழி வந்தபோது சோசியல் மீடியாவில் அவருக்கான ஆதரவு பெருகியது.

அது மட்டுமல்லாமல் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் போட்டு நிரூபிக்கப்பட்டது. மேலும் கமலும் அவருக்கு ஆதரவாக பேசினார். இதனால் தற்போது தனலட்சுமி தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை எபிசோட் முடிந்த பிறகு தனலட்சுமியின் நடவடிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டது.

அதிலும் திங்கள்கிழமை ஆரம்பித்தபோது அவர் மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார். அதாவது தேவையில்லாமல் சண்டை போடுவது, வம்பு இழுப்பது என்று அவர் தலைகணத்துடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். சென்ற வாரம் ஆண்டவரிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்ட அசீம் இந்த வாரம் கொஞ்சம் அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார்.

ஆனால் தனலட்சுமி அவரை வேண்டுமென்றே சீண்டி பார்ப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. அதிலும் நேற்று நிகழ்ச்சியில் அசீம் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று வெளிநடப்பு செய்த தனலட்சுமி இவர் பேசும்போது நான் இங்கு இருக்க மாட்டேன் என்று கூறியது பலருக்கும் கடுப்பை வரவழைத்தது. மேலும் வேண்டுமென்று அதன் தன்னை மரியாதை குறைவாக பேசுகிறார் என்று அவர் கூறியது அப்பட்டமான நடிப்பு.

மரியாதை என்ற ஒரு ஆயுதத்தை வைத்து அவர் மொத்த பழியையும் அசீம் மீது போட்டார். அது மட்டுமல்லாமல் அமைதியாக இருக்கும் அசீமை வேண்டுமென்றே கோபப்பட வைத்து அதன் மூலம் ஒரு சண்டையை அவர் உருவாக்க நினைப்பதும் வெளிப்படையாக தெரிந்தது. இறுதியில் அனைத்துக்கும் காரணமாக இருந்த தனலட்சுமி தன் மீது தவறே இல்லாதது போல் அழுது நடித்து சீன் போட்டது கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவராக இருந்தது. இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. நிச்சயம் அவருடைய தலைகணத்திற்கு இந்த வாரம் கமல் தன்னுடைய பாணியில் குட்டு வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.